Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ஜெமினி’ AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்!

09:02 PM Dec 07, 2023 IST | Web Editor
Advertisement

செய்யறிவு தொழில்நுட்பங்கள் கடந்த ஆண்டில் மட்டும் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் தனது 'ஜெமினி' (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். சாட் ஜிபிடி-க்கு(ChatGPT) போட்டியாக தனது 'பார்ட்' (Bard) செய்யறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்திருந்தது.

Advertisement

பல போட்டிகளுக்கு நடுவில் 'பார்ட்' தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள 'ஜெமினி' அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களையும் விஞ்சும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜெமினி நானோ (Gemini Nano), ஜெமினி ப்ரோ (Gemini Pro), ஜெமினி அல்ட்ரா (Gemini Ultra) என மூன்று வடிவங்களில் இந்த செய்யறிவு தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

பெஞ்ச் மார்க்குகளில் (benchmarks) சாட் ஜிபிடி.4-ஐ விஞ்சியிருக்கும் ஜெமினி அல்ட்ரா, பல வழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்து (text) வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள், காணொளி, ஒலி மற்றும் கோடு (Code) வடிவிலும் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக ஜெமினி உருவாக்கப்பட்டுள்ளது. கேமராவின் முன் ஒரு காகிதத்தில் ஏதேனும் வரைந்தாலோ அல்லது கை அசைவுகள் மூலம் தகவல்கள் தெரிவித்தாலோ, அதனையும் புரிந்துகொண்டு உரையாடல்கள் மேற்கொள்கிறது ஜெமினி.

'ஜெமினி நானோ' தற்போது 'கூகுள் பார்ட்' தளத்தில் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், ஜெமினி ப்ரோ டிசம்பர் 13 அன்றும், ஜெமினி அல்ட்ரா அடுத்த ஆண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன.

Tags :
aiBardChatGPTGeminiGemini ProGemini UltragoogleNews7Tamilnews7TamilUpdatesTechnology
Advertisement
Next Article