நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன - நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேட்டி!
விடுமுறை நாட்களில் ஐம்பது சதவீதம் டிக்கெட் நிரப்பினாலே வெற்றிதான். ஆனால் நூறு சதவீதம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது மகிழ்ச்சி என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் திரையிடப்பட்டுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை ரசிகர்களுடன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கண்டுகளித்தனர். இதனைத்தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராகவா லாரன்ஸ் திரையிலும், திரைக்கு பின்னும் கதாநாயகன் தான். மக்களின் ரசிப்புத்தரம் உயர்ந்துள்ளது. கிரிக்கெட்டை தாண்டி நிறைய இடங்களில் ஹவுஸ் புல்லாக படம் ஓடி இருக்கிறது. விடுமுறை நாட்களில் ஐம்பது சதவீதம் டிக்கெட் நிரப்பினாலே வெற்றிதான். ஆனால் நூறு சதவீதம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது.