தமிழ்நாட்டுக்கு குட் நியூஸ்... உறுதியானது #Ford நிறுவனத்தின் கம்பேக்!
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
அமெரிக்காவில் 2 நாட்களுக்கு முன்பு ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதால் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும்.
ஃபோர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் இரண்டாவது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும். ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டியர்பார்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ஃபோர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் தங்களது உற்பத்தியை நிறுத்தி வெளியேறியது. சென்னை மறைமலை நகரில் இருந்த தொழிற்சாலையும் மூடப்பட்டது.