வசூலில் கலக்கும் 'குட் பேட் அக்லி'... 9 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் | 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்.10ம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.
Karunaiyellam kidayaadhini vanmuraidhaan idhu #OGSambavam dhaan 🔥🔥🔥🔥 pic.twitter.com/ycmEn4lPl7
— G.V.Prakash Kumar (@gvprakash) April 18, 2025
இந்த நிலையில், குட் பேக் அக்லி திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியான 9 நாட்களில் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.