Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் அதிரடியாக அதிகரிக்கும் தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

10:42 AM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520-க்கு விற்பனையாகிறது.

Advertisement

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 6,470க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒரு கிராம் கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து 6565 ரூபாய்க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், இன்று கிராமுக்கு 760 ரூபாய் உயர்ந்து 52, 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வெள்ளி விலை ஒரு கிராம் ரு. 87.50க்கு விற்பனை செய்யப்பட நிலையில், இன்று வெள்ளி விலையும்  கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88.50க்கும் ஒரு கிலோ ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
22Carat916GoldChennaiGoldpriceGoldRateGoldRateTodayGramJewelssilversilverrate
Advertisement
Next Article