#GoldRate | மீண்டும் எகிறிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 56,800 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ரூ.50,000 கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி ஒரு சவரன் ரூ.55,000 கடந்து புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதன் பின்னர், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலையும் சரியத்தொடங்கியது.
ஒரு கட்டத்தில் ரூ.50,000-திற்கும் கீழ் வந்துவிடும் என நினைத்து கொண்டிருந்த நேரத்தில், ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் விலை உயரத்தொடங்கி இருக்கிறது.தங்கம் விலை ஏறுமுகத்திலேயே தொடர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 7,050-க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 56,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : மகாளய அமாவாசை | முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்திய பொதுமக்கள் – கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,100 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ. 101 - க்கு விற்பனை செய்யப்படுகிறது.