#GoldRate | புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 56,480 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.அந்த வகையில், செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
இதையும் படியுங்கள் : America | காட்டுக்குள் தொலைந்த 10 வயது சிறுமி… டிரோன் உதவியுடன் மீட்ட போலீசார் – நடந்தது என்ன?
அந்த வகையில், நேற்று (செப்.24)ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,000-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 56,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,060-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.98 -க்கு விற்பனையான நிலையில், ரூ.3 உயர்ந்து ரூ.101 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.