#GoldRate | அதிரடியாக குறைந்த தங்கம் விலை... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஆபரணத் தங்கம் நேற்று (டிச.1) கிராமுக்கு ரூ.7150 -க்கும், சவரனுக்கு ரூ.57,200 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : ஊத்தங்கரையை புரட்டி எடுத்த #Fengal… ஒரே நாளில் 50 செ.மீ. மழை பதிவு… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.7,090-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஒரு கிராம் வெள்ளி ரூ.100 -க்கும் , ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.