#GoldRate | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இதையும் படியுங்கள்: “நீ வேணா சண்டைக்கு வா” – மீண்டும் நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்!… வாய்ப்பே இல்லை என ஓடிய #Trump!
அந்த வகையில், நேற்று (செப். 12) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று (செப். 13) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6825-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 உயா்ந்து ரூ.95.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3500 உயா்ந்து ரூ.95,000-க்கும் விற்பனையாகிறது.