கோல்டன் குளோப் விருதுகள் 2025 - விருது வென்றவர்களின் முழு பட்டியல்!
2025ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பெற்றவர்களின் பட்டியலை இங்கு காண்போம்.
சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கான 82ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் தி ப்ரூடலிஸ்ட் (The Brutalist) சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் என 3 கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றது.
சிறந்த நடிகையாக 'I'm Still Here' பட நாயகி Fernanda Torres தேர்வானார். இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) திரைப்படம் விருது வெல்லும் வாய்ப்பை இழந்தது.
‘தி ப்ரூடலிஸ்ட்’ (The Brutalist) படத்திற்கு அடுத்தபடியாக, எமிலியா பெரெஸ் (Emilia Perez) படம், சிறந்த மியூசிக்கல் மற்றும் காமெடி பிரிவில் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த துணை நடிகை, ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் சிறந்த படம் ஆகிய விருதுகளும் எமிலியா பெரெஸ் படத்திற்கு கிடைத்தது.
- சிறந்த திரைப்படம் (ட்ராமா)
The Brutalist - சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/காமெடி)
Emilia Pérez - சிறந்த அனிமேஷன் திரைப்படம்
Flow - சிறந்த திரைப்படம் (Non-English)
Emilia Pérez - சிறந்த தொடர் (ட்ராமா)
Shōgun - சிறந்த தொடர் (மியூசிக்கல்/காமெடி)
HACKS - சிறந்த தொடர் (லிமிடட்/ஆன்தாலஜி)
Baby Reindeer - சிறந்த நடிகர் (திரைப்படம் - ட்ராமா)
ஏட்ரியன் ப்ரோடி (The Brutalist) - சிறந்த நடிகை (திரைப்படம் - ட்ராமா)
ஃபெர்னான்டா டோரஸ் (I'm Still Here) - சிறந்த நடிகர் (திரைப்படம் - மியூசிக்கல்/காமெடி)
செபாஸ்டியன் ஸ்டான்(A Different Man) - சிறந்த நடிகை (திரைப்படம் - மியூசிக்கல்/காமெடி)
டெமி மூர் (The Substance) - சிறந்த நடிகர் (தொலைக்காட்சி தொடர் - ட்ராமா)
ஹிரோயுகி சனாடா (Shogun) - சிறந்த நடிகை (தொலைக்காட்சி தொடர் - ட்ராமா)
அன்னா சவாய் (Shogun) - சிறந்த நடிகர் (தொலைக்காட்சி தொடர் - மியூசிக்கல்/காமெடி)
ஜெரமி ஆலன் ஒயிட் (The Bear) - சிறந்த நடிகை (தொலைக்காட்சி தொடர் - மியூசிக்கல்/காமெடி)
ஜீன் ஸ்மார்ட் (HACKS).