Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#America கோயிலுக்கு காஞ்சியில் தயாரான ரூ.1.25 மதிப்பிலான கோடி தங்க ரதம்!

08:41 AM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்க ரதம் விரைவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Advertisement

காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ள தனியார் ஆன்மீக நிறுவனம் சார்பில் ஆன்மீகம் தொடர்பான பொருட்கள் தயார் செய்து கோயில் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கோயிலுக்கான தங்க ரதம் ஆர்டர் பெறப்பட்டது.

அதன்படி 23 அடி உயரத்தில் 4 டன் எடையில் இரும்பு மற்றும் தாமிர உலோகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தங்க ரதம் 75 நாட்களில் செய்து முடிக்கப்பட்டது.35 டிகிரி திரும்பும் அளவிற்கும் நவீன தொழில்நுட்பத்துடன் தயார் செய்யப்பட்ட இந்த ரதமானது ஒரே நிலையில் செய்யாமல் 6 பாகங்களாக பிரித்து வைக்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிசு | 'தடம்' பெட்டகத்தில் இருப்பது என்ன?

மேலும் தயாரிக்கப்பட்ட இந்த தங்கரதத்தின் மதிப்பு 1.25 கோடி ரூபாய் ஆகும். இன்று தயாரித்து முடிக்கப்பட்ட இந்த தங்க ரதமானது 6 பாகங்களாக பிரிக்கப்பட்டு விமானம் மூலம் அமெரிக்கா சென்றடையவுள்ளது.

Tags :
AmericaAmerica Hindu TempleGolden ChariotKanchipuram
Advertisement
Next Article