Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

10:15 AM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மிக்ஸியில் மறைத்து கடத்தி கொண்டு வரப்பட்ட 2 கிலோ 579 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Advertisement

திருச்சியில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.  அச்சேவையை பயன்படுத்தும் பயணிகளிடம்,  ‘சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்கள் தொடர்பான சோதனை’ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.  அப்படி இன்றும் துபாயியிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அவ்வாறு அதிகாரிகள் நடத்திய சோதனையில்,  ஜூஸ் மிக்சர் மற்றும் உணவு தயாரிக்கும் இயந்திரத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.  இதனையடுத்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்பிலான 2.579 கிராம் தங்கத்தை  சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.   தொடர்ந்து இது தொடர்பாக பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
DubaiGoldsmugglingTrichyTrichy Airport
Advertisement
Next Article