Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் தங்கம் பறிமுதல்!

03:35 PM Dec 21, 2023 IST | Web Editor
Advertisement

துபாயிலிருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மதுரை மற்றும் துபாய்க்கு தினமும் ஸ்பைஜெட் விமானம் வெளிநாட்டு சேவை வழங்கி வரும் நிலையில் நேற்று துபாயிலிருந்து பிற்பகல் 12.30 மணியளவில் மதுரை வந்த ஸ்பைஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது.

இந்த நிலையில் நேற்று மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த 182 பயணிகளிடம் மதுரை விமான நிலைய சுங்க இலக்க நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பயணிகளிடம் நடத்திய விசாரணையில் எந்த பொருளும் கைப்பற்ற படாத நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகளின் இருக்கைகளில் சோதனை செய்ய ஆரம்பித்தனர்.

இதையும் படியுங்கள் : சிறுவனை கடத்தி சென்று கொலை செய்து, மூட்டைகட்டி வீசிய உறவுக்காரப் பெண் | கொடூர சம்பவம் நடந்தது எங்கே?

அப்போது ஸ்பைஜெட் விமான பணிப்பெண்கள் பயணி ஒருவரின் இருக்கையின் அடியில் வித்தியாசமான பொருள் ஒட்டப்பட்டு இருப்பதைக் கண்டு மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து, விமானத்திற்குள் உள்ளே சென்று பார்த்த போது பேஸ்ட் வடிவிலான தங்க கட்டிகள் இருப்பதை கண்டறியப்பட்டது.  சுங்க இலாகா பிரிவினர் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றிய பேஸ்ட் வடிவிலான தங்கத்தை உருக்கி பார்த்ததில் 940 கிராம் எடை தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. கடத்தல் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ.59.27 லட்சம் என்பது தெரிய வந்தது. விமான இருக்கையில் இருந்து தங்கம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
airplaneDubaiGoldMaduraimaduraiairportseizedspice jet
Advertisement
Next Article