For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Gold Rate Today | தங்கம் விலை குறைவு... இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
09:54 AM Jun 20, 2025 IST | Web Editor
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
gold rate today   தங்கம் விலை குறைவு    இன்றைய விலை நிலவரம் என்ன
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

Advertisement

இதையும் படியுங்கள் :குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

கஅந்த வகையில் தங்கம் விலை நேற்று (ஜுன் 19) கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.9,265க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.74,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.122க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஜுன் 20) குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,210க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.120க்கும்,ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Tags :
Advertisement