GOLD RATE | காலையில் உயர்ந்து மாலையில் சரிந்த தங்கம் விலை..!
காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1120 குறைந்து ரூ.91,200க்கு விற்பனையாகிறது.
06:59 PM Oct 24, 2025 IST | Web Editor
Advertisement
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
Advertisement
அந்த வகையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் சரிந்துள்ளது. அதன் படி மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 குறைந்து ரூ.91,200 க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.11,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் காலையில் 3 ரூபாய் குறைந்த வெள்ளி விலை மாலையில் மேலும் 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.