Gold Rate | தங்கம் விலை மீண்டும் உயர்வு!
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
அந்த வகையில், தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.10,840 -க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.86,720 -க்கும் விற்பனையானது. இதற்கிடையே, நேற்று மாலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,900க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.87,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று (அக்.4) மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,950க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது.