Gold Rate | தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.
இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73ஆயிரத்து 240-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 155-க்கு விற்பனை செய்யபட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 160-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 145-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.125-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.