தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கும், சவரன் ரூ.56,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த செப்டம்பரில் நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இப்படியே சென்றால் ஒரு கிராமாவது வாங்க இயலுமா என மக்கள் எண்ணிய நிலையில், எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவிற்கு இம்மாதத் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது.
இதையும் படியுங்கள் : பிளடி பெக்கர் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து தொடங்கியது. அதன்படி, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 6,995க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 55, 960க்கு விற்பனையானது.
அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 7,065க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ.56,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,040 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ. 101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.