GOLD RATE | காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3000 சரிவு..!
தங்கம் விலை நாளுக்கு நாள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரூ.97 ஆயிரத்தை தாண்டி சாதனை படைத்த தங்கம் விலை தீபாவளி பண்டிகைக்கு பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது.
வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (அக். 28) காலையில் தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை மாலையிலும் சரிந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை மாலையில்சவரன் ரூ.1,800 குறைந்து ரூ.88,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11.075க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது.
வெள்ளி விலை காலை நிலவரப்படி ரூ. 5 குறைந்து ரூ. 165-க்கு விற்பனையானது. மாலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.