#GoldRate | வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
இதையும் படியுங்கள் : “ஜெகபர் அலி மரணத்திற்கு அனைத்து அதிகாரிகளும் பொறுப்பு” – #EPS கண்டனம்
அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (ஜன.18) தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.59,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.