For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஷாக் கொடுத்த தங்கம் விலை... வார தொடக்கத்திலேயே அதிரடி உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
10:18 AM Jun 02, 2025 IST | Web Editor
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஷாக் கொடுத்த தங்கம் விலை    வார தொடக்கத்திலேயே அதிரடி உயர்வு   ஒரு சவரன் எவ்வளவு
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

Advertisement

இதையும் படியுங்கள் : ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள்… கோவில்பட்டியில் பயங்கரம்!

அதன்படி, தங்கம் விலை கடந்த மே 30ம் தேதி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,920க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனையானது. வார தொடக்கத்தில் தங்கம் விலை உயருமா? குறையுமா? என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஜுன் 2) அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.8,950-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமெதுமின்றி, ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement