தங்கம் விலை மேலும் உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன ?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த பிப். 1ந் தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 905-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63 ஆயிரத்து 240க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 930-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.