ஏறுமுகத்தில் தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு.
10:03 AM Mar 04, 2025 IST | Web Editor
Advertisement
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். காரணம் குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது இங்கு வழக்கமாக உள்ளது.
Advertisement
மேலும் தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.8,010-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.107-க்கும் ஒரு கிலோ ரூ.1,07,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.