மேலும் உயர்ந்த #Gold விலை - விரைவில் சவரன் ரூ.59 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்ப்பு!
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.7,340க்கும், சவரன் ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மேலும் தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் விலை உயர்வு நீடித்து வருகிறது.
சென்னையில் நேற்று (அக். 22) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ. 7,300க்கும், சவரன் ரூ.58,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48,200க்கும், கிராம் ரூ.6,025க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் ரூ.109க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று (அக்.23) ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து 7340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும் செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.48,440க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,055க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.112க்கும், ஒரு கிலோ ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கம் சவரன் ரூ.59000-ஐ விரைவில் எட்டும் என கருத்துகள் வெளியாவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.