அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.