தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.45,760 ஆக விற்பனையாகி வருகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இதையும் படியுங்கள்: நாடாளுமன்றத்தை பரபரப்பாக்கிய மேற்கோள் – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன?
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 12) சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 10 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்.......5,720
1 சவரன் தங்கம்......45,760
1 கிராம் வெள்ளி......77.70
1 கிலோ வெள்ளி..... 77,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம். ...........5,750
1 சவரன் தங்கம்..........46,000
1 கிராம் வெள்ளி......... 77.80
1 கிலோ வெள்ளி.........77,800