For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தங்கம் விலை சரிவு... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

12:13 PM Dec 16, 2023 IST | Web Editor
தங்கம் விலை சரிவு    ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இதையும் படியுங்கள்: திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்… ஒருவருக்கு கொரோனா தொற்று!

தங்கம் விலை தொடர்ந்து 2 நாளாக உயர்ந்த நிலையில்,  சனிக்கிழமை (டிச.16) தங்கம் விலை குறைந்துள்ளது.  அதன்படி,  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,790-க்கும்,  பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 46,320-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து கிராம் ரூ.77.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.800 குறைந்து ரூ.79,700-க்கும் விற்பனையாகிறது.

Tags :
Advertisement