தொடர்ந்து உயரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விலை அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இதனிடையே, வார தொடக்க நாளான நேற்று காலையும், மாலையும் என இருவேளையும் தங்கம் விலை உயர்ந்தது.
இதையடுத்து ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 480-க்கும் கிராம் ரூ.9 ஆயிரத்து 60-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 80-க்கு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 640-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.