For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர்ந்து சரியும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
09:55 AM Jun 28, 2025 IST | Web Editor
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை   இன்றைய நிலவரம் என்ன
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

Advertisement

இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8 ஆயிரத்து 985-க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71ஆயிரத்து 880-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8ஆயிரத்து 930 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement