For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் சரிவில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,760 குறைவு!

வாடிக்கையாளர்களிடையே தங்க நகைகள் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10:46 AM Jul 26, 2025 IST | Web Editor
வாடிக்கையாளர்களிடையே தங்க நகைகள் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் சரிவில் தங்கம் விலை  சவரனுக்கு ரூ 1 760 குறைவு
Advertisement

Advertisement

தங்கம் விலை தினமும் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கம், தற்போது படிப்படியாகக் குறைந்து சில்லறை வர்த்தகத்தில் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

நேற்று முன்தினம் (ஜூலை 24) ஒரு சவரன் தங்கம் ரூ.75,000-ஐத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, அடுத்த நாளிலேயே (ஜூலை 25) தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.9,255-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ .1,000 குறைந்து ரூ. 74,040-க்கும் விற்பனையானது.

இரண்டாவது நாளாக நேற்றும் (ஜூலை 26), தங்கம் விலை சரிந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து ரூ.9,210-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.360 குறைந்து

ரூ.73,680-க்கும் விற்பனையானது. வார இறுதி நாளான இன்றும் (ஜூலை 27) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.9,160-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.1,760 குறைந்துள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.126-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,000 குறைந்து ரூ.1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தத் தொடர் விலை சரிவு, வாடிக்கையாளர்களிடையே தங்க நகைகள் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement