கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் தங்கம் விலை .. - இன்றைய நிலவரம் என்ன?
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த வார தொடக்கத்திலிருந்து விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 23-ஆம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.58,400-க்கும் விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 அதிகரித்து அதிர்ச்சியை அளித்தது.
இதையும் படியுங்கள் : ஜார்க்கண்ட் முதலமைச்சராக #HemantSoren இன்று பதவியேற்பு!
இந்த வாரத்தின் முதல் நாளான தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் மூன்றாவது நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1760 குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,090-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று மாறாமல் ஒரு கிராம் வெள்ளி 98ரூபாய்க்கும். 1 கிலோ வெள்ளி 98,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.