Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! கிராம் ரூ.6,870-க்கு விற்பனை!

10:59 AM Apr 16, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.54,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இதையும் படியுங்கள் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!

இந்நிலையில்,  தங்கத்தின் விலை ஏறியும்,  இறங்கியும் வருவது வழக்கம்.  இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50,000 கடந்தது.  தொடர்ந்து அதிகரித்து வரும் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஏப். 14 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 6,855-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.600 அதிகரித்து ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து ரூ.54,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.6,870-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.  நேற்று வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்பட நிலையில்,  இன்று வெள்ளி ஒரு கிராம்  ரூ.90.50-க்கு விற்பனையாகிறது.  மேலும், வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500 ஆக உள்ளது. 

Tags :
ChennaiGoldGoldJewelsGoldpricePriceHikesilver
Advertisement
Next Article