#GoldRate | தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,560-க்கும், விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இது நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. பின்னர் அதன் விலை ஏற்றக்கை சந்தித்தது. இந்த சூழலில் மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அந்த வகையில் இன்று (ஆக.17) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ. 6,670-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,560-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.91-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2000 உயர்ந்து ரூ.91,000-க்கும் விற்பனையாகிறது.