புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.
இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதாவது, காலையில் ரூ.520-ம், மாலையில் ரூ.520-ம் என சவரனுக்கு ரூ.1040 அதிரடியாக உயர்ந்து ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 620-க்கும், ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,720 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலையும் வரலாறு காணாத அளவில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.134-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.