For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர்ந்து உயரும் தங்கம் விலை... கிராம் ரூ.6,545-க்கு விற்பனை!

10:32 AM Apr 04, 2024 IST | Web Editor
தொடர்ந்து உயரும் தங்கம் விலை    கிராம் ரூ 6 545 க்கு விற்பனை
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

சென்னையில் இந்த மாத த்தில் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.  நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 6500 ஆக இருந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 45 உயர்ந்து ரூ. 6545க்கு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று சவரன் ஒன்றுக்கு ரூ. 560 உயர்ந்து 52 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில்,  இன்று மீண்டும் ரூ. 360 ரூபாய் உயர்ந்து ரூ. 52,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டே வருகிறது.  இந்த தொடர் விலையேற்றம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது.  நேற்று வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1 ரூபாய் அதிகரித்து ரூ. 85க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement