For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா? 

11:58 AM Mar 06, 2024 IST | Web Editor
தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை    எவ்வளவு தெரியுமா  
Advertisement

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 48,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

அந்த வகையில் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது.  அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.6,040-க்கும்,  சவரனுக்கு ரூ.200 உயர்ந்து  ரூ. 48,320-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ. 78-க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1800 வரை உயர்ந்ததும்,  நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்தததும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement