For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தங்கம் விலை சரிவு! எவ்வளவு தெரியுமா?

11:46 AM Mar 30, 2024 IST | Web Editor
தங்கம் விலை சரிவு  எவ்வளவு தெரியுமா
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.50,960-க்கு விற்பனையாகிறது.

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வந்தது.  அந்த வகையில் நேற்று ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு,  ரூ. 20 குறைந்து ரூ.6,370-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.50,960-க்கும் விற்பனையாகிறது.  ஆனால் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.80.80-க்கும்,  ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 உயர்ந்து ரூ.81,000-க்கும் விற்பனையாகிறது.

Tags :
Advertisement