For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.54,000 -ஐ நெருங்கிய தங்கம் விலை! - பொதுமக்கள் அதிர்ச்சி..!

12:23 PM Apr 11, 2024 IST | Web Editor
ரூ 54 000  ஐ நெருங்கிய தங்கம் விலை    பொதுமக்கள் அதிர்ச்சி
Advertisement

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து சவரன் ரூ. 53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

ஆனால் இம்மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 6,705க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 20 உயர்ந்து ரூ. 6725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ. 50 பைசா குறைந்து, ரூ. 88.50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 88, 500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement