ரூ.52,000-ஐ நெருங்கிய தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இதையும் படியுங்கள் : “சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது” – கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்!
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.680 உயர்ந்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,455-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.81.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.