தொடர் சரிவில் தங்கம் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
நேற்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.
10:23 AM Aug 13, 2025 IST | Web Editor
Advertisement
Advertisement
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று குறைந்த விலையில் இருந்து இன்றும் தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதற்குப் பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,290-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.126-க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வும், சரிவும் தொடர்ந்து மாறி மாறி வருவதால் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.