Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
10:35 AM Jul 22, 2025 IST | Web Editor
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
Advertisement

 

Advertisement

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

கடந்த சில நாட்களாகவே நிலைத்தன்மையற்றதாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து ரூ.9,285-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.840 அதிகரித்து ரூ.74,280-க்கு விற்பனையாகிறது. இந்த அதிரடி விலை உயர்வு மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,000 உயர்ந்து 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
GoldPriceIndiaGoldRateSilverPriceTNnewsupdate
Advertisement
Next Article