Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Diwali-க்கு ஊருக்கு போறீங்களா? ரயில்வே சொன்ன குட் நியூஸ்!

10:25 AM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளி உள்ளிட்ட சில பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் 6,556 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் 6,556 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருவனந்தபுரம், மங்களூரு, பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதுபோல் தென்மாநிலங்களில் இருந்து பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

தெற்கு ரயில்வேயில் இதுவரை (அக்.8) 44 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் 394 முறை இயக்கப்படும். கடந்த ஆண்டு 21 ரயில்கள் 78 முறை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கொச்சுவேலி - நிஜாமுதின், சென்னை - சந்திரகாச்சி, தாம்பரம் - ராமநாதபுரம், திருச்சி -தாம்பரம், தாம்பரம் - கோவை, திருநெல்வேலி - ஷாலிமர், ஈரோடு - சம்பல்பூர், கோவை - தன்பாத், கோவை - சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில், மதுரை - கான்பூர், கொச்சுவேலி - மும்பை, கொல்லம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படையில், கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும். பயணிகள் கடைசி நேரத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு செல்வதை தவிர்க்க முன்னேரே முன்பதிவு செய்துகொள்ளலாம். ரயில் பயண அட்டவணை, வழித்தடம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலும், ஐஆர்சிடிசி இணையதளத்திலும் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
DiwalifestivalSouthern Railwaysspecial train
Advertisement
Next Article