#GOATFDFS | விஜய்யின் கோட் படம் எத்தனை கோடி வசூலிக்கும்?
கோட் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து, டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜய் இளம்தோற்றத்தில் தோன்றும் காட்சிகள் வைத்து இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாகவெளியாகி உள்ளது. தமிநாட்டை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது.
தமிழில் 2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான ஜெயிலர் படத்தின் சர்வதேச வசூல் 650 கோடி ரூபாய் என்பதே சாதனையாக இன்றுவரை உள்ளது. Sep 4, 2024 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 2023 அக்டோபர் 19 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான லியோ 620 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த வசூல் கணக்கில் ஜெயிலர், லியோ இரண்டு படங்களும் 210 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து சமமாக இருக்கின்றன. ஜெயிலர், லியோ படங்களை காட்டிலும் அதிக திரையரங்குகளில் இன்று வெளியாகும் கோட் முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்கும்.
அதன்படி, கோட் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 100 கோடி வசூல் செய்தால் கண்டிப்பாக கோட் படத்திற்கு பெரிய சாதனையாக பார்க்கப்படும் என்றே சொல்லலாம். படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால் கண்டிப்பாக லியோ படத்தின் மொத்த வசூலான 600 கோடிகளை தாண்டி விஜயின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் கொடுத்த படம் என்ற சாதனையை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.