For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளியை முன்னிட்டு ஓமலூரில் களைகட்டிய ஆட்டுசந்தை!

02:32 PM Nov 04, 2023 IST | Student Reporter
தீபாவளியை முன்னிட்டு ஓமலூரில் களைகட்டிய ஆட்டுசந்தை
Advertisement
ஓமலூர் மற்றும் சின்னதிருப்பதி ஆட்டு சந்தைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை களைகட்டியதால் இன்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சின்னதிருப்பதியில் ஆட்டு சந்தை இன்று நடைபெற்றது. இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் வளர்க்கும் செம்மறி,  வெள்ளாடு மற்றும் குரும்பாடுகள்
விற்பனைக்கு வந்திருந்தன.  வரும் 12-ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால்,  ஆட்டு சந்தையில் ஆடுகளின் விற்பனையும்,  விலையும் அதிகரித்து காணப்பட்டது.  ஓமலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பலரும் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

Advertisement

ஓமலூர் வட்டாரத்தில் தீபாவளி பண்டிகையில் அம்மன் கோவிலில் ஆடுகள் பலியிட்டு வழிபடவும்,  பண்டிகை இறைச்சியை சீட்டு நடத்தி வருபவர்களும் சந்தைக்கு வந்திருந்தனர்.  அதனால், ஓமலூர் மற்றும் சின்னதிருப்பதி ஆட்டு சந்தைகளில் 10 கிலோ எடையிலிருந்து 35 கிலோ எடை வரை ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.  ஒரு ஆடு ரூ.7500 துவங்கி ரூ.35,000 வரை விற்பனையானது.

ரா.கௌரி

Tags :
Advertisement