Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொங்கல் பண்டிகையை ஒட்டி களை கட்டிய எட்டையபுரம் சந்தை - ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

10:30 AM Jan 13, 2024 IST | Web Editor
Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற எட்டையபுரம் ஆட்டுச் சந்தையில் ரூபாய் 4 கோடி வரை ஆடுகள் விற்பனையாகின.  

Advertisement

மாட்டுப் பொங்கலுக்கு மறுநாளான கரிநாளில் தென் தமிழகத்தின் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.  எப்போதும் ஆட்டுச் சந்தைகளில் விற்பனை களைகட்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நடக்கும் ஆட்டுச் சந்தைகள் ரொம்பவே பாப்புலர்.  அதிலும் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் நடக்கும் ஆட்டுச்சந்தை கோடிகளில் புரளும் வர்த்தகத்தைக் கொண்டது.

தூத்துக்குடி மாவட்ட மானாவாரிப் பகுதி விவசாயிகள் வீடுகளில் 5 முதல் அதிகபட்சமாக 100 ஆடுகள் வரை வளர்த்துவருவதைப் பார்க்க முடியும்.  பெரும்பாலும் மேய்ச்சல் முறை வளர்ப்புதான்.  திரட்சியான உடல் அமைப்புடன்,  சல்லிசான விலையில் ஆடுகள் கிடைப்பதால் ஆட்டு வியாபாரிகளின் ஏகபோக சாய்ஸாக எட்டையபுரம் மாறியிருக்கிறது.

இந்நிலையில்,  புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையாக விளங்கி வரும்,  இந்த ஆட்டுச் சந்தையில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம்.  இந்த சந்தைக்கு திருநெல்வேலி,  தென்காசி,  விருதுநகர்,  மதுரை,  ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பதும்,  இறைச்சிக்காக வியாபாரிகள் வாங்கி செல்வதும் வழக்கம்.  குறிப்பாக பண்டிகை காலங்களை ஒட்டி நடைபெறும் ஆட்டு சந்தையின் போது அதிகளவில் ஆடுகள் விற்பனை ஆகும்.

நேற்று மதியம் முதல் தற்போது வரை நடைபெற்ற ஆட்டு சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள்,  கிடாக்கள் விற்பனைக்கு வந்தன.  இதில்,  3 முதல் 4 கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனையாகியுள்ளது.  இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement
Next Article