#GOAT பேனர் விவகாரம் - நீதிமன்றம் உத்தரவு!
கோட் திரைப்பட விவகாரத்தில் பிளக்ஸ் பேனர் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் நாளை (செப். 5) திரையரங்குகளில் வெளியாவுள்ளது.
தமிழ்நாட்டில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கோட் படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு திரையரங்குகள் முன்பாக பிளக்ஸ், பேனர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படியுங்கள் : Paralympics2024 | குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.