Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘சின்ன சின்ன கண்கள்’..  GOAT திரைப்படத்தின் 2-ஆவது சிங்கிள் புரோமோ வெளியீடு!

07:07 PM Jun 21, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்’  நாளை மாலை வெளியாகவுள்ள நிலையில், அதன் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.  இதில் நடிகர்கள் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரசாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே விஜய் பாடிய முதல் பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.  இதனையடுத்து இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.  இந்நிலையில், இந்த படத்தின் 2-ஆவது பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.  இப்பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், 'கோட்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.  அதன்படி,  2வது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் அதன் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Archana KalpathiChinna Chinna KangalgoatHBD Thalapathy VIJAYsecond singlevenkat prabhuvijayVijay68
Advertisement
Next Article