For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

GNI இந்திய மொழிகள் திட்டம் - NEWS7 TAMIL டிஜிட்டல் வளர்ச்சிக்கு எப்படி உதவியது?

10:51 PM Jun 13, 2024 IST | Web Editor
gni இந்திய மொழிகள் திட்டம்   news7 tamil டிஜிட்டல் வளர்ச்சிக்கு எப்படி உதவியது
Advertisement

GNI இந்திய மொழிகள் திட்டம் NEWS7 TAMIL டிஜிட்டல் வளர்ச்சிக்கு எப்படி உதவியது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

''மொழிச் செய்தி வெளியீட்டாளர்கள் தங்கள் ஆன்லைன் இருப்பை நவீனப்படுத்தவும், இணையம்,  பயன்பாடு மற்றும் வீடியோ வடிவங்களில் பயனர்களின் அனுபவங்களை மேம்படுத்த உதவும் வகையிலும், GNI இந்திய மொழிகள் திட்டத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்த திட்டத்தில் பயன் பெற விண்ணப்பியுங்கள் '' என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம்,  அனைத்து மொழிச் செய்தி வெளியீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த திட்டம் ஆங்கிலம்,  இந்தி,  கன்னடம்,  தமிழ்,  தெலுங்கு, பெங்காலி,  மலையாளம்,  குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய 9 மொழிகளில் வெளியீட்டாளர்களுக்கு ஆதரவை வழங்கப் போவதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது . இதையடுத்து நியூஸ் 7தமிழ் விண்ணப்பித்தது.

Gni நடத்திய Indian languages Program-ல் இந்தியா முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நியூஸ் ரூம்களிலில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில்,  தமிழ்நாட்டில் இருந்து நியூஸ்7 தமிழ் செய்தி நிறுவனம் உட்பட 323 செய்தி நிறுவனங்கள் முதல் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன.

இந்தியாவைப் பொறுத்த வரை செய்தி நிறுவனங்கள்,  ஆங்கிலத்தில் செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட தன்மையுடனும் பிராந்திய மொழிகள் தொழில்நுட்பத்தில் சற்று பின் தங்கியிருக்க கூடிய சூழலும் நிலவுகிறது.  இதனை கண்டறிந்து ஆங்கில செய்தி நிறுவனங்களை போன்று பிராந்திய மொழி செய்தி நிறுவனங்களும் தொழில்நுட்பரீதியாக, பு திய வகை டிஜிட்டல் டூல்களுடன் செய்திகளை வழங்க வேண்டும் என்று பிரதான நோக்கத்துடன் GNI இந்திய மொழிகள் திட்டத்தை கூகுள் நிறுவனம் வழங்கியது.

இந்த திட்டத்தில் கூகுள் இந்தியா செய்திப் பிரிவு திட்ட மேலாளரான (Program Manager, Google News India ) ஷ்வேத்தா சூசன் இலியாஸ்,  மீடியாலஜி சாப்ட்வேரின் நிர்வாக மேலாண் இயக்குநர் மனிஷ் திங்கிரா ஆகியோர் இந்த திட்டத்திற்கு பொறுப்பேற்று செய்தி வெளியீட்டு நிறுவனங்களை வழிநடத்தினர்.

GNI இந்திய மொழிகள் திட்டத்தை 3 கட்டங்களாக நடத்தினர்.   முதலாவதாக நியூஸ் 7 தமிழ் போன்று செய்தி நிறுவனங்களின் இணையதளங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிதல்,  இணையதளப் பக்கத்தின் வேகத்தின் தன்மை குறித்து அளவிடுதல் , மொபைல்களில் படிக்கும் தன்மையுடன் இணையதளங்களில் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து தமிழ் மொழியிலயே பிரச்சனைகளை விளக்கி அந்தந்த செய்தி நிறுவனங்களின் வெளியீட்டு மொழியிலேயே பிரச்சனைகள் என்ன இருக்கிறது என்பதை கண்டறிந்த அறிக்கையை வழங்கினர்.

அதோடு,  மொழி செய்தி வெளியீட்டாளர்களின் இணையதள பக்கங்களை கூகுள் நிறுவனத்தோடு,  READWHERE நிறுவனத்தின் தொழில் நுட்ப குழுவும் இணைந்து சரி செய்து கொடுத்தனர்.  நியூஸ் 7 தமிழ் இணையதளத்தை பொறுத்தவரை செய்தியை சொடுக்கி உள்ளே படங்கள் திரையில் தெரிவதற்கான கால அளவு அதிகம் எடுத்துக் கொண்டதை கண்டறிந்து அதனை சரி செய்து கொடுத்தனர்.  கோர் வெப் வைட்டல்ஸ்,  வெப்சைட் ஆப்டிமைசேஷன்,  என்சிஐ,  அட்வர்டைசிங் உள்ளிட்டவற்றை அறிய யூடியூபில் வீடியோ ஆப்பிடிமைசேஷன் கூகுள் தலைமையிலான 8 அமர்வுகள் '' tech talks " என்ற பெயரில் தொழில்நுட்ப ரீதியாக அறிந்து கொள்ள வேண்டியவை குறித்த பயிற்சி பட்டறைகளையும் நடத்தினர்.

முதலாவது அமர்வில் GOOGLE Analytics - 4 அறிமுகமாகி பயன்பாட்டிற்கு வந்த தருணம். GOOGLE Analytics - 4 மூலம் தான் இணையதளங்களில் செய்திகளை படித்தவர்கள் எவ்வளவு பேர், எத்தகைய செய்திகளை படிக்கிறார்கள்,  எவ்வளவு மணி நேரம் பயன்பாட்டாளர்கள் நமது இணைய தளத்தில் செய்திகளை படிக்கின்றனர்,  எந்த துறை சார்ந்த செய்தியை அதிகம் விரும்பி படிக்கிறார்கள்,  எந்தெந்த வயதையுடையவர்கள் எந்தெந்த செய்தியை தேடி படிக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து அதற்கேற்ப செய்திகளை வெளியீட்டாளர்கள் வழங்குவது இயல்பு.  அதனடிப்படையில் UA மற்றும் GA4 இடையே உள்ள வேறுபாடுகள்,GA4 இல் புதிதாக என்ன இருக்கிறது? செய்தி இணையதளங்களுக்கான GA4 பிற Google தயாரிப்புகளுடன் இணைக்கவும், தனிப்பயன் பார்வையாளர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களுக்கான அறிக்கைகள் மூலம் ஆய்வுகள் செய்வது தொடர்பான பயிற்சிகளை வழங்கினர்.

அதே போன்று ''கோர் வெப் வைட்டல்ஸில் புதியது என்ன?'' , ''தேடல் மற்றும் கண்டுபிடிப்பிற்கான வீடியோக்களை மேம்படுத்துதல்",  "GA4 இல் உள்ள அறிக்கைகள்." "செய்திகளுக்கான யூடியூப் ஷார்ட்ஸ்கள்" , "விளம்பரம் மூலம் வாசகர் வருவாயை அதிகரிப்பது." , "விளம்பர மேலாளர்: வாசகர் வருவாயை மேலும் உயர்த்தவது" , "GA4 கட்டிடத் தொகுதிகள் (நிகழ்வுகள், பரிமாணங்கள் மற்றும் அளவீடுகள்) ஆகியவற்றை குறித்து துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களுடன் வாரம் ஒரு மெய்நிகர் பயிற்சி பட்டறையை நடத்தினர்.

அது மட்டுமல்லாது டிஜிட்டல் செய்தி நிறுவனங்களில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களை தேர்வு பெற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக '' INSPIRATION SERIES " என்ற பெயரில் இந்திய மொழிகள் திட்டத்தின் கீழ் வழங்கினர்.  இந்த தொடரின் முதல் விருந்தினராக  "அச்சு முதல் பிக்சல்கள் வரை:  இந்திய மொழி செய்தி ஊடகத்தின் டிஜிட்டல் மாற்றம்" குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குநர் திரு. ஆனந்த் கோயங்கா,  அச்சு ஊடகங்களில் பெரும் நம்பகத்த்மையை கொண்டிருந்த தனது நிறுவனம் டிஜிட்டலாக மாற்றும் போது ஏற்பட்ட சவால்கள்,  செய்தி வெளியீட்டில் வகுத்த வியூகங்கள் அனைத்தைநயும் பகிர்ந்துக் கொள்ள வைத்தது உதவியாக இருந்ததோடு மேலும் இத்திட்டத்தின் வடிவமைப்பு தன்மை எதிர்பார்ப்பை கூட்டியது.

'' INSPIRATION SERIES " இரண்டாவது அமர்வில் Taks & Lallantop, TV Today நெட்வோர்கின் நிர்வாக செயல் இயக்குநர் விவேக் கவுர் "பிராந்திய மொழி செய்தி பிராண்டுகளை உருவாக்குவதற்கான 360° அணுகுமுறை. " என்ற தலைப்பில் அவரது அனுபவங்கள், யுக்திகள்,  வியூகங்களை பகிர்ந்துக் கொண்டது இந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களுக்கு பெரிதும் உதவின.

குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களை இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்து அவர்களது செய்தி இணையதளத்தை வேகப்படுத்த SORTD WordPress plug-in பதிவேற்றம் செய்துக் கொடுத்தனர்.  அது மட்டுமல்லாமல்,  mobile Application இல்லாத நிறுவனங்களுக்கு Android மற்றும் IOS செயலிகளை இத் திட்டத்தின்கீழ் உருவாக்கி தந்தனர்.  கூடவே Mediology தொழில்நுட்ப குழு mobile Application தொடர்ந்து கண்காணித்து,  நிர்வகித்தும் வருகின்றனர்.

Mobile Application ஐ பொருத்த வரை API, UX/UI, testing,  deployment and support அனைத்தும் சிறப்பாக செய்து தந்தனர்.  உறுதியிட்டு சொல்கிறேன் இந்த Application மூலம் எங்கள் செய்தி வழங்கும் முறையும் மேம்பட்டிருக்கிறது .

இதையடுத்து,  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) , Google News Initiative & FICCI இணைந்து டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் செய்தி பிரிவு- தலைவர் (Head of news partnerships) துர்கா ரகுநாத் பங்கேற்று,  இந்திய மொழி திட்டம் எப்படி கூகுள் செய்தி முன் முயற்சிக் குழுவின் சிந்தனையில் உருவானது? எப்படி வடிவமைத்தார்கள்? அதன் தேவை என்ன? , இதன் பயன்பாடுகள் எவ்வளவு ? இந்த திட்டத்தின் மூலம் பிராந்திய செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் எப்படி அவரவர் செய்தி வெளியீட்டு மொழியிலயே பயனடைகின்றனர் உள்ளிட்ட அனைத்தையும் அனுபவ ரீதியாக பகிர்ந்து கொண்டார் . இந்த கருத்தரங்கு அமர்விற்கு இந்திய மொழித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து மொழி செய்தி வெளியிட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.


இத்திட்டத்தின் நிறைவாக குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களை தேர்வு செய்து தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிதியுதவி அளித்தனர்.  அதனை கொண்டு டிஜிட்டல் நியூஸ் ரூம்களை மேம்படுத்தவும்,  புதிய தொழில்நுட்பங்களை வாங்கவும்,  தொழில்நுட்ப வல்லுனர்களை பணியமர்த்தவும் உதவின.

''இந்திய இணையதள வெளியீட்டாளர்களை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் புனேவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக நியூஸ் 7 தமிழ் - டிஜிட்டல் பிரிவு தலைமை அதிகாரி சுகிதா சாரங்கராஜூற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அழைப்பின் பேரில் சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று சுகிதா சாரங்கராஜ் GNI இந்திய மொழி திட்டம் நியூஸ் 7 தமிழுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது,  இத்திட்டத்தின் சிறப்புகள், பயன்பாடுகள் அடைந்த பலன்கள் அனைத்தையும் அனுபவங்களின் வாயிலாக பகிர்ந்து கொண்டார்.  இத் திட்டத்தில் பயன் அடைந்த குஜராத் சமாச்சார் மற்றும் நியூஸ் கர்நாடகா ஆகிய பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களும் கருத்துகளை பகிர்ந்தனர்.  இந்த கருத்தரங்கை கூகுள் இந்தியா செய்திப்பிரிவு ஒருங்கிணைப்பு மேலாளர் (News Partner Manager - Google India) அபிஷேக் மாத்தூர் நெறியாள்கை செய்தார்.  கூடவே கூகுள் இந்தியா செய்திப் பிரிவு திட்ட மேலாளரான (Program Manager, Google News India ) ஷ்வேத்தா சூசன் இலியாஸ்,  மீடியாலஜி சாப்ட்வேரின் நிர்வாக மேலாண் இயக்குநர் மனிஷ் திங்கிரா ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்தில் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம்,  பிராந்திய மொழி செய்தி நிறுவனங்களை அதனதன் மொழியிலயே தொழில்நுட்பத்தில் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.


இந்த திட்டத்தின் நிறைவில் GNI இந்திய மொழிகள் திட்டத்தை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.  இந்திய மொழி திட்டத்தின் சிறப்பை, அனுபவங்களை மொழிரீதியாக செய்தி வெளியீட்டாளர்களை தேர்வு செய்து அவர்கள் செய்தி நிறுவனங்களுக்கே சென்று அவர்களது அனுபவங்களை ஆவணப்படுத்தியது.  இதனை Google news initiative -youtube மற்றும் linkedin பக்கத்தில் வெளியிட்டுள்ளது .

GNI இந்திய மொழிகள் திட்டமானது மொழி செய்தி வெளியீட்டாளர்களுக்கு மகத்தான திட்டம்.  இந்த திட்டத்தில் பங்கேற்று பயனடைந்த அனுபவத்திலயே இந்த கட்டுரையை வடிவமைத்துள்ளேன்.  அச்சு ஊடகத்தில் இருந்து காட்சி ஊடகம்,  தற்போது டிஜிட்டல் என செய்தி துறையின் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி தொடரந்து 18 ஆண்டுகள் பணியாற்றி வந்திருக்கிறேன்.  அதனடிப்படையில் தொழில்நுட்ப கல்வி பின்னணியின்றி பத்திரிகையாளர்களாக இருக்கும் ஒவ்வொரு பத்திரிகையளருக்கும் செய்தி அறைகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கற்றறிய சிறந்த வாய்ப்பு இந்த திட்டம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்ததன் விளைவே இந்த கட்டுரை.

இதோ இந்த ஆண்டுக்கான GNI இந்திய மொழிகள் திட்டம் 2.0 விற்கு GNI மற்றும் MEDIOLOGY மென்பொருள் நிறுவனங்கள் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டனர்.  இந்த ஆண்டும் பல எண்ணற்ற புதிய தொழில்நுட்பங்களோடு மீண்டும் களமிறங்குகின்றனர்.  புதியதாக இன்றைய டிஜிட்டல் நியூஸ் ரூம்களை ஆக்கிரமித்திருக்கும் AI குறித்த பிரத்யேக பயிற்சித் திட்டங்களோடு,  GenAI Tools for Growth: Google Cloud இன் கருவிகள் (Google Cloud வாடிக்கையாளர்களுக்கு) மூலம் உள்ளடக்கத்தைக் கண்டறியும் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை பல்வேறு கட்டங்களாக கடந்த முறைப் செயல்படுத்தி சாதனை படைத்தது போன்றே கூகுள் இந்தியா செய்திப் பிரிவு திட்ட குழுவும், மீடியாலஜி மென்பொருள் நிறுவன குழுவும் இந்த முறையும் சிறப்பாக வழங்க தயாராகிவிட்டனர். இந்த திட்டத்திற்கு விண்ணபிப்பிதற்கு கடைசி நாள் ஜூன் 17.  இதற்கு விண்ணப்பித்து சீறிய அளவிலான மொழிரீதியான செய்தி வெளியீட்டாளர்கள் பங்கேற்று பயனடைந்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் மற்றுமொரு சிறப்பு, இந்த திட்டம் தொடங்கி முடியும் வரை அந்தந்த மொழி வெளியீட்டாளர்களுக்கு அவரவர் மொழி தெரிந்த ஒரு ஒருங்கிணைப்பாளர் GNI - READWHERE நிறுவனங்கள் சார்பாக நியமிக்கப்படுவார்.  அதனால் தயக்கமின்றி அவரவர் மொழிகளிலயே சந்தேகங்கள் கேட்டறிவதோடு அலுவல்ரீதியான தொடர்புகளுக்கும் ஒருங்கிணைப்புக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

உலகளாவிய மொழி என்பதால் ஆங்கிலத்திற்கு இருக்கும் இயல்பான சாதகங்கள்,  தொழில்நுட்பரீதியாக ஒத்திசைந்து போவதற்கான சிறப்புகளால் ஆங்கில மொழி செய்தி வெளியீட்டாளர்கள் பிராந்திய மொழி வெளியீட்டாளர்களை விட சற்று முன்னோக்கி போவதற்கான சூழல் இருந்தது.  அதனை மாற்றி தொழில்நுட்பரீதியாக பிராந்திய மொழி வெளியீட்டாளர்களும் ஆங்கில மொழி வெளியீட்டாளர்களுடன் வளர்ச்சி,  வர்த்தகம், நேர மேலாண்மை என அனைத்திலும் சம வாய்ப்புகளுடனான நீடித்த வளர்ச்சியை நோக்கி செல்வதற்கான வழி வகையை GNI இந்திய மொழி திட்டம் செய்துள்ளது .  இதன் மூலம் இந்தியாவின் பன்மைத்துவத்தையும்,  பன்மொழிகளின் ஆளுமையையும் தொழில்நுட்பம் சிதைத்து விடாமல் காப்பாற்றி இருக்கிறது.

Tags :
Advertisement