Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஞானசேகரன் வீடு இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானதா? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு ஆக்கிரமிப்பு தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
01:53 PM Jan 13, 2025 IST | Web Editor
Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன்( 37) தங்கியிருந்த வீடு இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கருணை கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு மறைந்த ஓய்வூதியர்களின் குடும்பத்தினருக்கு 1000 ரூபாய் கருணை கொடை காசோலை வழங்கினார். அதன் பின்பு செய்தியாளர்கள் அமைச்சர் சேகர், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கொடை மற்றும் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

தொடர்ந்து அவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஞானசேகரன் தங்கி உள்ள வீடு இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ளது என்கிற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், குறிப்பிட்ட அந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் திருமண மண்டபம் உள்ளது. மீதமுள்ள இடத்தில் 16 பேர் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முன் பகுதி சென்னை மாநகராட்சிக்கும் பின்பகுதி இந்து சமய அறநிலை துறைக்கும் சொந்தமாக உள்ளது. இரண்டு துறையும் இணைந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆக்கிரமிப்பு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அங்கு இருந்து வருவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கு மாநகராட்சி உடன் இணைந்து இதுவரை ஆறு கூட்டங்கள் போட்டுள்ளோம். மேலும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அடிப்படையில் ஞானசேகரன் பேரில் அந்த இடமில்லை. அவரது தந்தையின் பெயரில்தான் உள்ளது. 657 சதுர அடி நிலத்தில் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்து சமய அறநிலை துறை இடத்தை யார் ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற முன்பே முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் திமுக ஆட்சியில் தான் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் உள்ள இடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதா? அல்லது வாடகைதாரர்களாக ஏற்பதா? என்கிற அடிப்படையில் துறை ரீதியான ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் மாநகராட்சியும் இந்த இடத்தில் தொடர்பு இருப்பதால் அவர்களிடம் கலந்து ஆலோசித்து யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருக்கோயில் இடங்கள் பாதுகாக்கப்படும்" என்றார்.

Tags :
Anna universityanna university issueganasekaranP. K. Sekar Babu
Advertisement
Next Article