’2028 ஆம் ஆண்டளவில் உலகளாவிய மருத்துவச் செலவு $2.3 டிரில்லியனை எட்டும்’ - ஐக்யூவிஎஐ தகவல்..
2028 ஆம் ஆண்டில் உலகளாவிய மருத்துவச் செலவு $2.3 டிரில்லியனை எட்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஐக்யூவிஎஐ தெரிவித்துள்ளது.
ஃபோராகார்ட் ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்னைகளை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது. கடந்த டிசம்பர் மாதம் அதிகம் விற்பனையான மருந்துகளில், ஃபோராகோர்ட் முதலிடம் பிடித்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஐக்யூவிஎஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகரிக்கும் காற்று மாசுபாடும், தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றும், நிலவி வரும் குளிர்காலமும் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. சுவாசக்கோளாறுகள் அதிகரித்து வரும் நிலையில், விற்பனையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ரூ.85 கோடிக்கு இந்த மருந்து விற்பனையாகியிருப்பதாகவும், இது வழக்கத்தைவிட 22 சதவீதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருந்துகளும் விற்பனையில் முதலிடத்தை பிடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஃபோராகோர்ட் முதலிடம் பிடித்துள்ளது. தற்போது, நீரிழிவு, தோல் மற்றும் மகளிர் பிரச்னைகளுக்கான மருந்து விற்பனை குறைந்திருப்பது, ஒட்டுமொத்த மருந்து விற்பனையில் எதிரொலிக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் ரூ.67 கோடிக்கும், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள் ரூ.68 கோடிக்கும் விற்பனையாகியிருப்பதாகவும், இது முறையே 14 மற்றும் 11 சதவீத சரிவு என்றும் கூறப்படுகிறது. நீரிழிவு, நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான மருந்துகளுடன், இதயநோய், இரைப்பை நோய்களுக்கான மருந்துகளும் முறையே 8 சதவீதம், 6 சதவீதம் அதிகரித்துள்ளது.